போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்
காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டம் சம்பா பகுதியில் சர்வதேச எல்லையை யட்டியுள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் பகல் 1.30 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் யாருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று எல்லை பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.கடந்த 4 நாட்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது இது 2வது முறை ஆகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply