ஈராக் தலைநகர் பாக்தாத்தை நெருங்கும் கிளர்ச்சியாளர்கள்: தாக்குதல் நடத்தும் ராணுவத்தினர்

ஈராக்கில் சன்னி இனத்தை சார்ந்த கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி அங்குள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். கடந்த வாரம் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அடுத்து மொசூல் நகரை கைப்பற்றினர். நேற்று அவர்கள் மேலும் முன்னேறி தல் அஃபாரை கைப்பற்றினர். இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் முடிவில் அவர்கள் மேலும் முன்னேறி வருகின்றனர். தற்போது பாக்தாத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் அவர்கள் நிலை பெற்றுள்ளனர். அவர்களுக்கும் ஈராக் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாக்தாத்திலுள்ள தங்களது தூதரக அதிகாரிகளை காக்கும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா 275 ராணுவத்தினரை அங்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிடுவார்கள் என்று தெரிகிறது. மேலும் கிளர்ச்சியாளர்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அங்கு வாழும் மக்களின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply