உலக கோப்பை கால்பந்து: பான் கி மூன் ஆதரவு யாருக்கு?
பிரேசிலில் நடைபெறும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா மோதும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான (தென் கொரியா நாட்டை சேர்ந்த) பான் கி மூனிடம் ‘உங்கள் ஆதரவு எந்த அணிக்கு?’ என்று ஜெனிவாவில் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த பான் கி மூன் கூறியதாவது:- இது மிகவும் உணர்வுப்பூர்வமான, சிக்கலான கேள்வி. தென் கொரிய அணியை ஆதரிக்கும் எனது உணர்வுகளை நான் மறைப்பதற்கில்லை. எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் என்ற முறையில் விறுப்பு-வெறுப்பற்ற நடுநிலையாளனாக நான் இருந்தாக வேண்டும்.
உலக கோப்பை போட்டியில் விளையாடும் அனைத்து நாடுகளையுமே நான் ஆதரிக்கிறேன். ஆனால், அதே வேளையில் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) இன்னொன்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ரஷ்யாவுடன் இன்று மோதும் முதல் போட்டியில் இருந்து, மற்ற அணிகளுடன் தென் கொரிய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும், எனது இதயத் துடிப்பு இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.
எனது நடுநிலைத் தன்மையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ரஷ்யாவுடன் தென் கொரியா மோதும் இந்த போட்டியை பார்ப்பதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன். நாளை காலை எனது உதவியாளரின் மூலமாக தகவல் அறிந்துக் கொள்வேன். இந்த போட்டியில் விளையாடும் அனைத்து அணிகளுக்குமே எனது நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply