யாழ். நடைமுறையை வவுனியாவிலும் செயல்படுத்துமாறு சிறீ-ரெலோ கோருகிறது.

 யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத வரி மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவ்வாறு கப்பம் கோரும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன்பிரகாரம் யாழ். படை அதிகாரிகள் முறைப்பாட்டு தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண டெலிகொம் இலக்கமான 9968 மற்றும் யாழ்ப்பாண சீடிஎம்ஏ இலக்கங்கங்களான 060 221 9131 மற்றும் 4629 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். எவராவது கப்பம் கோரினால் நேரடியாக அல்லது மறைமுகமாக பயமுறுத்தல் விட்டால் வர்த்தகர்களோ பொதுமக்களோ சிறிதும் தயக்கமின்றி மேற்கண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு யாழ். படைத்தரப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வர்த்தகர்களோ பொதுமக்களோ தம்முடன் தொடர்பு கொண்டு 5 நிமிடங்களுக்குள்ளாக அவர்களது இடத்திற்கே வந்து உதவி செய்யவிருப்பதாக தெரிவித்துள்ள படை அதிகாரிகள் உங்கள் உடமைகள் சொத்துக்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பாதுகாப்புப் படையினராகிய தாம் உங்களுடன் ஒத்துழைத்து வருகின்றோம் என யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மாவட்ட படை அதிகாரிகள் பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேசி மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே குடாநாட்டில் கப்ப நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தற்போதைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

மேற்படி யாழ்ப்பாண குடாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளை வவுனியாவிலும் செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பை சிறீ-ரெலோ கேட்டுக்கொண்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply