சில அடிப்படைவாதிகளால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அபகீர்த்தி : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகத்தின் மூலம் வெற்றி கொண்ட சுதந்திரத்தை நாட்டின் அனைத்து இன மக்களும் சமமாக அனுபவிக்க உரிமை உள்ளதாகவும் அந்த உரிமையை அபகரிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வொன்றில் தலைமை தாங்கி உரையாற்றிய ஜனாதிபதி, ஓர் இனத்தை அழித்து இன்னொரு இனம் ஒரு போது முன்னேற்றம் அடைய முடியாது எனவும் தெரிவித்தார்.
“ப்ராச்சீன” மொழியியல் நிறுவனத்தின் பண்டிதர் பட்டம் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களான பந்துல குணவர்தன, விஜித்விஜிதமுனி சொய்ஸா, பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, மத்திய மாகாண ஆளுநர், முதலமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த சில தினங்களில் இடம்பெற்றுள்ள சம்பவங்களை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் திரிபுபடுத்தப்பட்டு உண்மைக்கு முரணாக சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வேறு வடிவமாக இந்த சம்பவங்கள் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப் படுகின்றன. நடக்காதவற்றை திரிவுபடுத்தி கூறுவதால் நாட்டுக்கு இது பெரும் அபகீர்த்தியை உண்டுபண்ணியுள்ளது. அடிப்படைவாதிகள் சிலரால் மேற்கொள்ளப் படும் இத்தகைய செயல்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் அபகீர்த்தியை விளைவித் துள்ளன. இதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.
நாம் செய்யாதவற்றுக்காக குற்றம் சுமத்தப்படும் போது நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். சிறு குழுவொன்று மேற்கொண்ட செயலினால் சர்வதேசத்தின் முன் அனைத்து மக்களும் நாடும் குற்றவாளியாக பார்க்கப்படுகிறது.
எளிதாக எவரும் மேற்கொள்ளும் நடவடிக்கையின் பிரதிபலன் என்னவெனில் இறுதியில் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டியுள்ளது. நாம் வரலாற்றில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். 50இக்கு 50 என்று செல்வநாயகம் தனி நாடு கோரிய வட்டுக்கோட்டை தீர்மானம், இவை அந்த மக்களுக்கு பெற்றுக் கொடுத்த நன்மை என்ன?
சிறிமகா போதி, தலதா மாளிகை, காத்தான்குடி பள்ளிவாசல், ஆலயங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதால் பெற்றுக் கொண்ட பலன் என்ன? எனவும் ஜனாதிபதி வினவினார்.
மஹிந்த சிந்தனை கொள்கையின் மூலம் நாட்டில் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சுதந்திரத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டும். அதற்கான உரிமை அனைத்து மக்களுக்கும் உள்ளது. அந்த உரிமையை அபகரித்துக் கொள்ள எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித் தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply