இலங்கைக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டு

இலங்கையில் 2009-ஆம் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் புலம் பெயர்ந்தவர்களின் மறு வாழ்வுக்காக அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வின் அகதிகள் நல ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களுக்கும், 1940-களிலிருந்து அங்கு வசித்து வரும் சீன வம்சாவளியினருக்கும் குடியுரிமை அளிக்க வழி செய்யும் சட்டத்தை இலங்கை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம், குடியுரிமையற்று தவிக்கும் பலரது நல்வாழ்வில் இலங்கை ஒளியேற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் நாட்டைவிட்டு வெளியேறிவர்கள் 11,400 பேர் இலங்கை திரும்ப ஐ.நா. அகதிகள் நல ஆணையம் உதவியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply