உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அறிந்ததும்-அறியாததும்
‘ஃபிஃபா’ என்றழைக்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது ஆட்டம் 1930-ம் ஆண்டு உருகுவே நாட்டில் நடைபெற்றது. இதில் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.இந்த போட்டியில் 4௨ என்ற கோல் கணக்கில் அர்ஜெண்ட்டினாவை வீழ்த்தி, உருகுவே கோப்பையை கைப்பற்றியது. அதிகாரப்பூர்வ உலக கோப்பை கால்பந்து போட்டி இது தான். எனினும், 1909-ம் ஆண்டில் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டில் உள்ள புகழ் பெற்ற ‘கிளப்’ அணிகள் மோதிய ‘சர் தாமஸ் லிப்டன் சுழற்கோப்பை போட்டி’யை முதல் உலக கோப்பை போட்டி என்று சிலர் குறிப்பிடுவதுண்டு.1930-ல் தொடங்கிய இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 1974-ம் ஆண்டில் முதன்முதலாக வழங்கப்பட்ட வெற்றிக் கோப்பை 18 கேரட் தங்கத்தினால் 11 பவுண்டு எடையில் தயாரிக்கப்பட்டதாகும்.அடுத்த போட்டி நடைபெறும் 4 ஆண்டுகள் வரை அந்த கோப்பையை வெற்றியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பது கடினம் என்பதால், ‘ஒரிஜினல்’ கோப்பையைப் போன்ற தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பை மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது.
1930 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என இரண்டாம் உலகப் போர் நடந்த 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகள் நீங்கலாக இதுவரை 19 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. 200க்கும் மேற்பட்ட நாடுகள் விளையாடியுள்ள இந்த போட்டிகளில் 8 நாடுகள் மட்டுமே வெற்றிக் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறையும், இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
கால்பந்து விளையாட்டைப் பொருத்த வரை உலகின் பெரும் சாதனைக்குரிய வீரராக கருதப்படுபவர், பீலே. பிரேசில் நாட்டவரான இவர் 1958, 1962 மற்றும் 1970-ம் ஆண்டுகளில் பிரேசில் அணி 3 முறை கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார். (1970-ல் நடைபெற்ற போட்டியில் இவர் விளையாடவில்லை.)
17 ஆண்டுகள் 249 நாட்கள் என்ற வயதில் உலக கோப்பையை கைப்பற்றிய மிக இளம்வயது சாம்பியனாகவும் பீலே கருதப்படுகிறார்.
உலக கோப்பை போட்டியில் மிக குறுகிய நேரத்தில் ‘கோல்’ பதிவு செய்த நாடு, துருக்கி. 2002-ல் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் துருக்கி வீரர் ஹக்கன் சுக்குர், ஆட்டம் தொடங்கிய 11 வினாடிகளில் முதல் கோலை பதிவு செய்தார்.
நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இப்போட்டிகளில், ஒரு நாட்டின் சார்பில் ஒரு முறை விளையாடிய வீரரை அடுத்த போட்டியிலும் பார்ப்பது சற்று கடினம் என்ற நிலையில், ஜெர்மனியின் லோத்தர் மத்ஹாஸ் மற்றும் மெக்சிக்கோவை சேர்ந்த அண்டோனியோ கர்பஜால் ஆகியோர் மட்டுமே 1982௧998-ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 5 போட்டிகளின் 25 ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் என்ற தனிச்சிறப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply