ஞானசார தேரர் கைதுசெய்யப்படவேண்டும் : வாசுதேவ

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் இனரீதியான முரண்பாட்டை உண்டு பண்ணியமை தொடர்பிலும், அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுள்ளார்.அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும், இதேவேளை அளுத்கமவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல.

அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply