எரிபொருள் தொகுதி, களஞ்சியங்கள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் மாஹம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எரிபொருள் தொகுதிகளையும், எரிபொருள் களஞ்சியங்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திறந்துவைத்தார். மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன எரிபொருள் தொகுதியைத் திறந்துவைத்த ஜனாதிபதி அதன் பின்னர் மாஹம்புர எரிபொருள் களஞ்சியத்தையும் திறந்து வைத்தார்.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் தொகுதி ஜேர்மன் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட் டிருப்பதுடன், இது 5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் தொகுதிக்கான பெயர் பலகையை திரைநீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி, அங்கிருந்து மாஹம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத் திற்குச் சென்றார்.
அங்கு 76 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் களஞ்சியம் மற்றும் எரிபொருள் முனையம் ஆகியவற்றைத் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து மாஹம்புர துறைமுகத்தில் தரித்துநின்ற இந்திய கப்பலொன்றுக்கு எரிபொருள் வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி தொடங் கிவைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப் பினர்கள், மதத் தலைவர்கள் மற்றும் வெளி நாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வுகளைப் பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கான மக்களும் வருகை தந்திருந்தனர். வருகைதந்திருந்த மக்களு டனும் ஜனாதிபதி கலந்துரையாடியி ருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply