நமது சூரிய மண்டலத்தில் பூமி போல் ஒரு கிரகம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
நமது சூரிய மண்டலத்தில் இருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களிலேயே மிகச் சிறிய கிரகம் இது தான் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கிரகம் கிலிசி 876 என்ற அதன் தாய்க் கிரகத்தை சுற்றி வருகிறது. இந்த இரு கிரகங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 20 லட்சம் மைல்கள். பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 9 கோடியே 30 லட்சம் மைல் ஆகும். இந்த கிரகம் பூமியைப் போல் ஏழரை மடங்கு பெரியது.
பூமியில் இருந்து 15 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கிரகம் உள்ளது. பூமியைப்போல இந்த கிரகத்திலும் மலைகள் உள்ளன. ஆனால் உயிரினங்கள் வசிக்க முடியாது. அந்த அளவுக்கு அங்கு மிக மிக வெப்பமாக உள்ளது. இந்தப்புதிய கிரகம் 400 முதல் 750 டிகிரி வெப்பம் உடையது. அங்கு உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்.
ஜூபிடர் கிரகத்தில் இருப்பது போல் அங்கு வாயுக்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply