தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத கையளிப்புக்கு பெரு வரவேற்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரிவு இன்று கலைக்கப்பட்டு, அவர்களிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை பாதுகாப்புப் படைப் பிரிவினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கின்றனர். இதனை அரசாங்கம் முழுமனதுடன் வரவேற்பதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
புலிகளால் இவர்களது உயிருக்கு எந்த வித அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ரீ.எம்.வி.பி. ஆயுதங்களை இன்று உத்தியோகபூர்வமாக கையளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இது நற்பெயரை பெற்றுக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த ரீ.எம்.வி.பி.க்கு புலிகளால் பாரிய உயிர் அச்சுறுத்தல் இருந்து வந்தது.
இதனால் அவர்கள் மறைமுகமாக ஆயுதங்களை வைத்தும், பாவித்தும் வந்தனர். தற்பொழுது எமது பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை வந்துள்ளமை யினாலும், புலிகளினால் உயிர் அச்சுறுத்தல் இன் மையினாலும் அவர்கள் ஆயுதங்களை கையளிக்கின்றனர்.
இது எமக்குக் கிடைத்த மற்றுமொரு நற்சான்றிதழும், பாரிய வெற்றியுமாகும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply