உலக கோப்பை கால்பந்து: சிலியை வீழ்த்தியது நெதர்லாந்து
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் சிலி அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் லென்ஸ் பவுல் ஆனார். மறுபடியும் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மீண்டும் லென்ஸ் பவுல் ஆனார். ஆட்டத்தின் 25வது ஓவரில் சிலி அணியின் சில்வா பவுல் செய்தார். முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. ஆட்டத்தின் 46வது ஓவரில் சிலியின் அலெக்சிஸ் பவுல் ஆனார். ஆட்டத்தின் 64வது ஓவரில் நெதர்லாந்து வீரர் ப்ளைண்ட்டிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 69வது ஓவரில் நெதர்லாந்து அணியில் லென்சுக்கு பதிலாக மெம்பிஸ் களமிறங்கினார்.
எனினும் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் நெதர்லாந்தின் பெர் அசத்தலான கோல் அடித்து தங்கள் அணியின் ஸ்கோர் பட்டியலை 1 ஆக உயர்த்தினார். இந்நிலையில் ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் நெதர்லாந்தின் மெம்பிஸ் அழகான கோல் அடித்து தனது அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டாக உயர்த்தினார். ஆட்டம் முடியும் வரை சிலி வீரர்கள் கோல் அடிக்காததால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நெதர்லாந்தின் முன்கள ஆட்டக்காரரான ராபென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply