அளுத்கம, பேருவளை பகுதிகளுக்கு நாமல் விஜயம்

அளுத்கம-பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கலவரத்தால் அழிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளை நாமல் ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார். முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அப்பிரதேச பெளத்த தேரரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் 20 பொலிஸ் குழுக்கள் அமைக்க்பபட்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply