இந்தியா–பாகிஸ்தான் இடையே 2015–ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர்? ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டம்

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வந்தது. அதே சமயம் இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் ஆதரவாக வாக்களித்தது. ‘மீண்டும் கிரிக்கெட் உறவு’ என்ற நிபந்தனையின் பேரில் தான் இந்த ஆதரவை அளித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியா–பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்டில் முழுமையான நேரடி தொடர் (டெஸ்ட் போட்டிகள் உள்பட) அடுத்த ஆண்டு (2015) டிசம்பரில் நடத்துவதற்கு இந்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் வாங்கி இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின், போட்டிகள் நடத்துவதற்கான இறுதிவடித்தை இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும் என்று நம்புவதாகவும் அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply