திருடப் புகுந்த வீட்டில் பேஸ்புக் பயன்படுத்தியதால் சிக்கிய திருடன் !
திருடப் போனால் திருட்டோடு நிற்க வேண்டும், அங்கு பேஸ்புக் எல்லாம் பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டவேண்டியதுதான் ! அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் திருடன் ஒருவன் , திருடிய வீட்டில், கணினியை உபயோகித்து, தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்திவிட்டு, பின்னர், ஃபேஸ்புக் கணக்கை ‘லாக் அவுட்’ செய்ய மறந்ததை அடுத்து காவல் துறையிடம் சிக்கியுள்ளான். திருடிய வீட்டின் உரிமையாளரின் கணினியில் தனது ஃபேஸ்புக் கணக்கை திறந்து பார்த்த அந்த நபர் பின் கணக்கை மூட செய்ய மறந்துள்ளான்.
அந்த திருடிய நபரான நிகோலஸ் விக் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் ‘ப்ரோஃபைல் பிக்சர்’ அதாவது அவரது புகைப்படத்தை வைத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீதியில் அந்த நபரை அடையாளம் கண்டுள்ளார்.
அந்த வீட்டுக்குள் சென்று கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களைத் திருடியதாகவும், அந்த வீட்டில் உள்ள கணினியைப் பயன்படுத்தித் தனது ஃபேஸ்புக் கணக்கில் நுழைந்ததாகவும் நிகோலஸ் விக் ஒப்புகொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டல் அந்த நபருக்கு பத்து ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்படலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply