பொலிவிய விமான நிலையத்தில் 11 பேரை கத்தியால் குத்திய நபர்
பொலிவியாவில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவரை போல் காணப்பட்ட விவசாயி ஒருவர் சமையலறையில் பயன்படுத்தும் கத்தியை கொண்டு 11 பேரை குத்தி தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் யாருடைய உயிருக்கும் எவ்வித ஆபத்துமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரே ஒரு பெண்மணி அடிவயிற்றில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கத்தியால் குத்திய விவசாயியை பிடித்த போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டது. அந்நாட்டின் உள்துறை இணை மந்திரி ஜோர்ஜ் பெரேஸ் கூறுகையில், அதிக சத்தம் கேட்டதால் தன்னை தற்காத்துக் கொள்ள கத்திக்குத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அந்த விவசாயி தெரிவித்துள்ளதாக கூறினார்.
கிராமத்திலிருந்து வந்த அந்த மனநிலை பாதிக்கப்பட்ட விவசாயி டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கச் சென்றபோது அங்கு வரிசையில் நின்ற பயணிகள் அவரை கோபப்படுத்தும் வார்தைகளால் திட்டினார்களா என்பது தெரியவில்லை. 41 வயதான சேவியர் விர்ஜிலியோ குசி என்ற அந்த விவசாயி சாண்டா ரோசா மலைப்பிரதேசத்தில் வசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply