கதிர்காமம் கொடியேற்றம் இன்று

உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து இந்துக்களின் முருக வழிபாட்டுத் தலமாகவும்,. பிற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய சுற்றுலா நகராகவும் இருந்துவரும் பழைமையும் அற்புதங்களும் நிறைந்த கதிர்காமம் முருகப் பெருமானின் கொடியேற்றம் பஷ்நாயக்க நிலமே தலைமையில் இன்று இரவு (28) 7. 45 மணிக்கு இடம்பெறுகின்றது. கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் காண நாட்டின் நாற்திசைகளிலிருந்து இன மத மொழி கடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கதிர்காமத் தலத்தில் தங்கியு ள்ளனர்.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி தலத்திலிருந்து கடந்த 10 ஆம் திகதி பாதயாத்திரையை ஆரம் பித்த வேல்சாமி என்னும் எஸ். மகேந்திரன் தலைமையிலான குழுவினரும் கொடியேற்ற நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இப்பாதையாத்திரைக் குழுவினரால் கொடியேற்றத்தை தொடர்ந்து வரும் 15 நாட்களும் பிரதான முருகன் சந்திதானத்திற்கு அருகிலுள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலை மாலை கூட்டுப் பிரார்த்தனை பஜனை என்பன இடம்பெறவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply