லஞ்சம் வாங்கியவரை சுட்டுக் கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்
சிரியா நாட்டில் சுங்கச் சாவடியில் லஞ்சம் வாங்கிய தங்கள் இயக்கத்தை சேர்ந்த வீரர் ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்று, சிலுவையில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு என்ற பெயரில் சிரியா நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஏற்கனவே அங்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய மற்றொரு தீவிரவாத இயக்கமான அல் நுஸ்ரா முன்னணி ஆதிக்கம் செலுத்தி வரும் பல பகுதிகளில் வரி மற்றும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இரு பிரிவினருக்கும் இடையில் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், மத துவேஷம் செய்து விட்டதாக அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்ததற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவரது தலையில் 3 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர், கை, கால்களில் ஆணி அடித்து அவர் சிலுவையில் அறையப்பட்டார். அந்த பிணத்தை 3 நாட்களுக்கு சிலுவையில் தொங்க விடுமாறு ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply