பாப்பரசரின் இலங்கை விஜயம் தடுக்கப்படக்கூடாது!- எரிக் சொல்ஹய்ம்
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று எரிக் சொல்ஹய்ம், புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாப்பரசரின் விஜயம் தடுக்கப்படலாகாது என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹய்ம் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக இல்ஙகை விஜயத்தின் போது நேரில் காணும் அனுபவங்களைப் பொறுத்து அவர் தன் கருத்தை வெளியிடலாம் என்றும் எரிக் சொல்ஹய்ம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரூனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றும்படியும் சொல்ஹய்ம் ருவிட்டர் ஊடாக பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது இலங்கைக்கு விஜயம் செய்த டேவிட் கமரூன், தமிழ்ப் பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே எதிர்வரும் ஜனவரி 13, 14ம் திகதிகளில் பாப்பரசரின் இலங்கை விஜயம் நடைபெறும்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply