இன்று நோன்பு ஆரம்பம் பெரிய பள்ளிவாசல் முடிவு

ஹிஜ்ரி 1435 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை மன்னார், எருக்கலம்பிட்டி, திருமலை உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதையடுத்து இன்று முதல் நோன்பு அனுஷ்டிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இணைந்து ஏகமனதாக முடிவுசெய்தன. புனித ரமழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் நேற்று மஃரிப் தொழுகை நேரமாகிய 6.30 மணி தொடக்கம் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டிருந்தது.

இதன்படி நேற்று மாலை மேற்குறித்த பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டதாக உறுபதிப்படுத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply