ஈராக் இரு தரப்பு மோதலில் 21 ராணுவ வீரர்கள் பலி

ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே மதக்கலவரம் உருவானது. தற்போது அதுவே உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா பிரிவினரின் அரசை எதிர்த்து சன்னி பிரிவின் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வலிமை வாய்ந்த ஈராக் மாநில இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவாக உள்ளனர். அதனால் தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. ஏற்கனவே, மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ள போராளிகள் தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜர்ஃப் அல் சக்கர் என்ற இடத்தில் இன்று போராளிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 21 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

சன்னி பிரிவினர் அதிகம் வாழும் இப்பகுதியில் பல மணி நேரம் வரை நீடித்த இந்த இரு தரப்பு மோதலில் பல போராளிகளும் பலியாகினர். மேலும், சந்தேகத்துக்குரிய பலரை ராணுவத்தினரும், போலீசாரும் கைது செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply