பாகிஸ்தானியர்களுக்கு விசா தடையை விதித்துள்ள இலங்கை அரசு
கடந்த மே மாதம் 1ஆம் தேதியன்று சென்னை ரயிலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை முடிவுகள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜிஹாதிப் போராளிகள் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் திட்டங்களை வகுத்துள்ளதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த ஷாகிர் ஹுசைன் 20க்கும் மேற்பட்ட முறை இந்தியாவிற்கு உளவுப்பயணங்களை மேற்கொண்டது நிரூபணமானது.இவர்கள் இந்தியா மீதான தங்களின் தாக்குதல் திட்டங்களை நிறைவேற்ற இலங்கை, மாலத்தீவுகள் ஆகிய அண்டை நாடுகளை தங்களின் போக்குவரத்துத் தடமாக உபயோகித்து வருவதும் விசாரணையில் புலப்பட்டது. எளிதான விசா நடைமுறையில் பயணிகள் என்ற பெயரில் இலங்கைக்கு வரும் பாகிஸ்தானியர்கள் அகதிகளாக அங்கு தங்களின் வருகையை நீட்டித்திருப்பதுவும் தெரியவந்தது.
இந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதியன்று இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றபோது இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார். அந்த சமயத்தில் மோடி இந்த உணர்வுபூர்வமான பிரச்சினை குறித்து ராஜபக்ஷேவிடமும், மாலத்தீவுகளின் புதிய அதிபர் அப்துல்லா யாமீனிடமும் விவாதித்தார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக அகதிகள் என்ற பெயரில் இலங்கையில் நீடித்திருக்கும் பாகிஸ்தானியப் பயணிகள் அனைவரையும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த முடிவினால் கிட்டத்தட்ட 1500 பாகிஸ்தானியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறக்கூடும். இவர்களில் பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டுள்ள அகமதியா பிரிவினரும், ஷியா முஸ்லிம்களும் அடங்கியுள்ளதால் இந்த அறிவிப்பும் ஐ.நா மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுமட்டுமின்றி இனி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தானியர்கள் முன்கூட்டியே விசா அனுமதி பெறவேண்டும் என்றும் இலங்கை அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply