புதிய கடற்படை தளபதி இன்று கடமையேற்பு

புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா இன்று (01) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே பிரியாவிடைப் பெற்றுச் செல்லவுள்ளார். இதற்கான பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இன்று மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது. ஆரம்பமாக தற்போதைய கடற்படைத் தளபதியான அட்மிரல் ஜயனாத் கொலம்பகே கடற்படைத் தளபதிக்குரிய சம்பிரதாய வாளை புதிய தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேக்கான விசேட பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து இலங்கையின் 19 வது கடற்படைத் தளதிபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி முதல் கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய அட்மிரல் ஜயனாத் கொலம்பகே சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதன் காரணமாக முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 28ம் திகதியிலிருந்து வைஸ் அட்மிரல் தரத்திலிருந்து வைஸ் தரத்திற்கு உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply