மெக்சிகோவில் கடத்தல் கும்பல்- ராணுவத்தினருக்கிடையே துப்பாக்கி சூடு: 22 பேர் பலி

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் குறிப்பாக தலைநகர் மெக்சிகோ சிட்டியைச் சுற்றியுள்ள மெக்சிகோ மாநிலத்தில் சமீபகாலத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கொலைகள் அதிகரித்துள்ளன. அதுபோல் குயேரேரோ மாநிலத்தில் உள்ள மலை நகரமான ட்லடயாவில் மரிஜுவானா போதைப் பயிரின் விளைச்சல் அதிக அளவில் நடைபெற்றுவருகின்றது. எனவே இந்தப் பகுதியில் பாதுகாப்புத்துறையினர் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்றும் அரசுத்துருப்புகள் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள கடத்தல் காரர்கள் பயன்படுத்திய கிடங்கு ஒன்றினை அவர்கள் கடக்க நேரிட்டது. அப்போது அங்கு இருந்தவர்கள் பாதுகாப்புத்துறையினர் மீது துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு துறையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 22 ஆண்களும், ஒரு பெண்ணும் பலியானதாகக் கூறப்படுகின்றது. கடத்தி வரப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று பெண்களையும் ராணுவ வீரர்கள் அங்கிருந்து மீட்டுள்ளனர். மேலும், 22 தானியங்கித் துப்பாக்கிகள், இரண்டு சிறு ரக துப்பாக்கிகள், 13 கைத்துப்பாக்கிகள், ஒரு கையெறி குண்டு மற்றும் டஜன் கணக்கான வெடிபொருட்கள் போன்றவற்றையும் பாதுகாப்புத்துறை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பாதுகாப்புத்துறை வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் நேற்றைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளிக் குழுவைச் சேர்ந்தவர்களா என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply