மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் அளிப்பவர்களை பழிவாங்கக்கூடாது!
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள, சர்வதேச விசாரணை குழுவிற்கு ஆலோசனை வழங்க மூவர் நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதில் சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கின்ற நபர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் குறித்த அறிக்கை மூலம் இலங்கை அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply