அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல் ஐக்கிய தேசிய கட்சி, முஸ்லிம் அடிப்படைக்குழு மீது சந்தேகம்

தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் தனக்கு பல கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அஸ்வர் எம்.பி செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தகவல் ஊடகத்துறை மேற்பார்வை எம்,பி. அலுவலகத்திற்கு வந்த சி.ஐ.டி.யினர் அஸ்வர் எம்.பியிடம் வாக்கு மூலம் பதிவு செய்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து செயற்படுவதால் ஐ.தே.கவுடன் தொடர்புள்ள இனவாத முஸ்லிம் குழுக்கள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலுள்ளவர்களுக்கும் எஸ்.எம்.எஸ் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்பு வதாக ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி தெரிவித்தார். ஜனாதிபதியுடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக சிலர் தனக்கு தொலைபேசியில் ஏசி தவறான தகவல்களை பரப்புவதாக குறிப்பிட்ட அவர், தன்னைப்பற்றி சமூகத்தில் பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் குறிப்பிட்டார்.தனது 50 வருட அரசியல் வாழ்வில் சிங்கள- முஸ்லிம் இன உறவுக்காக பெரும் பங்கற்றியதாகவும் பேருவளை- அளுத்கம சம்பவத்தின் போது அந்த மக்களின் நல்லுறவுக்காக பாடுபட்டதாகவும் தெரிவித்தார்.

அழிவடைந்த சொத்துக்களை மீளமைக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் உடைந்த மனங்களை தேற்றவும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள தாகவும் குறிப்பிட்டார். 30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ள நிலையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்க முடியாது. ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் எனவும் அஸ்வர் எம்.பி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply