இராணுவத்தில் மேலும் தமிழ் இளைஞர்களை இணைக்க நேர்முகப் பரீட்சைகள்
இராணுவத்திற்கு மேலும் தமிழ் இளைஞர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நேர்முகப் பரீட்சைகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் தொழில்சார் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்காக இவர்கள் இணைக்கப்படவுள்ளனர். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றக்கூடிய தொழில்சார் திறன் கொண்ட சாரதிகள், பேக்கரியில் பணியாற்றக்கூடியவர்கள், சமையல் காரர்கள், விவசாயத்தில் ஈடுபடக்கூடிய இளைஞர்கள் என 500 பேரை இணைத்துக் கொள்வதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை நடத்திய நேர்முகப் பரீட்சையில் தொழில்தகைமைகள் உடைய 25 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டிரு ப்பதுடன், இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் கிளிநொச்சியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. முதலாவது தொகுதியில் 125 பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது தொகுதி இளைஞர்களை இணைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
தொழில்சார் பணிகளில் ஈடுபடுத்தப்பட முன்னர் இவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் ஆரம்ப பயிற்சிக்கான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என கிளிநொச்சி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply