ஐந்து வருடங்களில் TNA முன்வைத்த தீர்வு என்ன?
தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது. இப்படியானதொரு தீர்வைத்தான் த. தே. கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்க வேண்டும். முதலில் அவர்கள் தமது தீர்வுத் திட்டத்தை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அப்படியில்லாமல் தள்ளம்பல் போக்கோடு தீர்வுத்திட்டத்தை அணுகினால் த. தே. கூ. என்ன எதிர்பார்க்கிறது என்பதே தெளிவில்லாமல் இருக்கும். அரசியல் அய்வாளரான யதீந்திரா இவ்வாறு தெரிவிக்கிறார்.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டு வருகிறது என்பது தொடர்பாக இணையத்தளம் ஒன்று வினவியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
யுத்த முடிவடைவதற்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் செயற்பாடுகளும் அதன் இலக்கும் வேறு, யுத்த நிறைவுக்குப் பின்னரான அரசியல் செயற்பாடுகளும் அதனது இலக்கு வேறு. யுத்தம் நிறைவுக்கு முன்னர் தமிழர் களுடைய அரசியலுக்கு தலைமை தாங்கிய அமைப்பின் விழ்ச்சிக்குப் பின்னர், அந்த தலைமைப் பொறுப்பினை எடுத்துக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள், அதன் வெற்றி. தோல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த 5 வருடங்களைப் பார்க்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக என்ன மாதிரியான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது என்று சொன்னால, இதுவரை ஒரு காத்திரமான, ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்புக்களையோ அல்லது அதற்கான அடிப்படையான அடித்தளத்தையோ இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வரையறுக்க முடியாமல் இருக்கிறது என்றுதான் சொல்லலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply