சாட்சியமளிப்போரை குழப்ப வேண்டிய தேவை இராணுவத்திற்கு இல்லை : பிரிகேடியர் ருவான் வணிகசூரிய
முல்லைத்தீவில் நடைபெற்றுவரும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பவர்களை அச்சுறுத்த வேண்டிய தேவை இராணுவத்தி னருக்கோ அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கோ கிடையாது என இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
சாட்சியமளிக்கச் செல்பவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளை மறுப்பதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முல்லைத்தீவில் சாட்சியங்களைப் பதிவுசெய்து வருகிறது. இதில் சாட்சியமளிக்கச் செல்பவர்களுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்துக் கேட்டபோதே, இராணுவப் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வென்பது அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டதொரு ஆணைக்குழு. விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது நியமிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அதன் செயற்பாடுகளைக் குழப்ப வேண்டிய தேவை இராணுவ த்துக்கு இல்லையென இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த ஆணைக்குழுவின் செயற்பாடு களுக்கு இராணுவத்தினர் ஒதுத்துழைப்பு வழங்குவார்களே தவிர, ஒருபோதும் அவற்றைக் குழப்பமாட்டார்கள். சாட்சியமளிக்கச் செல்பவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்படுவதாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த விதமான உண்மையும் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமையும் நேற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்றும் நாளையும் ஆணைக்குழுவின் அமர்வுகள் கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாள் அமர்வுகளில் 100ற்கும் அதிகமானவர்கள் சாட்சியங்களைப் பதிவுசெய்ததுடன், புதிதாக சாட்சியமளிப்பதற்கு வருகைதந்த 200ற்கும் அதிகமானவர்களின் விபரங்களும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply