கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை: இலங்கையிடம் கேட்டுப் பெற மத்திய அரசு திட்டம்
கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. இதேபோல் தமிழக அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. கச்சத்தீவை திரும்ப பெற்றால்தான் தாங்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியும் என்றும் மீனவர்களும் கூறுகிறார்கள். இது தீராத பிரச்சினையாக இருந்து வருவதால் மீனவர்கள் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
இந்த நிலையில், இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்தியா வருகிறார். வெள்ளிக்கிழமை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை அவர் சந்தித்து பேசுகிறார்.
ஜி.எல்.பெரீசின் இந்த பயணத்தின் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை சுற்றியுள்ள இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உரிமையை இலங்கையிடம் கேட்டுப் பெற இந்தியா தீர்மானித்து இருப்பதாகவும், ஜி.எல்.பெரீசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது இந்த யோசனையை இந்திய அரசு முன்வைக்க இருப்பதாகவும் இலங்கையில் இருந்து வெளிவரும் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply