அடைக்கலம் கேட்ட ஈழத்தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைத்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்று அந்நாட்டில் அடைக்கலம் கோரியவர்களை இலங்கை அரசாங்கத்திடமே அந்நாடு ஒப்படைத்தது. அவர்களில் 24 பேர் பெண்கள் மற்றும் 9 பேர் சிறுவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரையும் இலங்கை அதிகாரிகளிடம் ஆஸ்திரேலிய அரசு நேற்று மட்டக்களப்பு கடல் பகுதியில் ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஆஸ்திரேலியா அமைச்சரான ஸ்காட் மாரிசன் விடுத்துள்ள அறிக்கையில், 41 பேரும் மட்டக்களப்பு துறைமுகம் அருகே கடலில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  ஆனால் மட்டக்களப்பில் துறைமுகமே இல்லை என்பதே இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய விஷயமாகும். இலங்கை கடற்படைக்கு சொந்தமான சமுத்ரா படகில் ஏற்றி வரப்பட்ட அவர்களில் பெண்களும் குழந்தைகளும் பூசா தடுப்பு முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் மட்டும் ரகசிய இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது சிறுவர்கள் மட்டும் விடுவிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக காவல்துறை செய்தி தொடர்பாளரான அஜித் ரோகன கூறியுள்ளார். அடைக்கலம் கோரிய அகதிகளை தங்களிடம் ஒப்படைத்த ஸ்காட் மாரிசனுக்கு பிளாட்டினத்தால் செய்யப்பட்ட விலைமதிப்புள்ள அணிகலன்களை கொத்தபாய ராஜபக்சே பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply