நேபாளில் உள்ள விஷ்ணு ஆலயத்தின் கட்டிட நிர்மாணப் பணிக்கு இந்தியா நிதியுதவி
நேபாளின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 10 கி.மீ வடக்கே உள்ளது புத்தநீலகந்தா ஆலயம் ஆகும். புகழ் பெற்ற விஷ்ணு ஆலயமான இந்தக் கோவில் இந்துக்களின் மத நம்பிக்கையையும், கலாச்சார முக்கியத்து வத்தையும் வெளிப்படுத்தும் ஒரு புனிதத் தலமாக உள்ளது. இங்கு உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் தினசரி வருகின்றனர்.
இந்தக் கோவில் பணியில் ஈடுபடுபவர்கள் மதாடிஸ் என்ற ஒரு கட்டிடத்தில் தங்கியிருப்பர். இந்தக் கோவிலில் உள்ள தங்குமிடம் தற்போது சிதிலமடைந்துள்ளது. எனவே இதனை சீரமைப்பு செய்வதற்கு இந்திய அரசு 21.76 மில்லியன்(என்ஆர்) நிதியுதவி அளிப்பதாக நேற்று அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்படும் இந்த பொருளாதார ஒத்துழைப்பு கூட்டுறவு திட்டத்திற்கான புரிதல் ஒப்பந்தம் இந்தியத் தூதரகம், மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் ஸ்ரீ புத்தநீலகந்தா நாராயண் பகுதி மேலாண்மை குழு ஆகியவற்றால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்திய உதவியுடன் கட்டப்படும் புதிய தங்குமிடம் அந்த இடத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதாக அமையும் என்று இந்த ஒப்பந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply