செக்ஸ் குற்றத்தால் பாதித்த சிறுவர்களிடம் போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டார்

மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் செக்ஸ் குற்றத்துக்கு ஆளாகி பல சிறுவர் – சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்–சிறுமிகளிடம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார். வாடிகன் சிட்டியில் நேற்று அவர் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அதில் பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–பாதிரியார்களின் ‘செக்ஸ்’ குற்றத்தை மறுந்துவிடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமை களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத்தையும் பாவச் செயல்களையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது’’ என்றார்.

பிரார்த்தனையின்போது அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அது ஸ்பெயினில் மொழி பெயர்க்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply