கட்டார் சென்ற இளம் குடும்பஸ்தர் 9ம் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்
திருமணம் செய்து மூன்று மாதங்களில் கட்டாருக்கு தொழிலுக்காகச் சென்ற அம்பாறை மாவட்டம், கோமாரி, மணற்சேனையைச் சேர்ந்த விஜயநாதன் நிசாந்தன் (வயது 21) எனும் இளம் குடும்பஸ்தர் அங்கு 9 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த முதலாம் திகதி கட்டாரில் இடம்பெற்றுள்ளது. கட்டாரில் மரணமான கணவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அவரது மனைவி தவநேசன் சாந்தினி (வயது 20) வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திலும், வெளிவிவகார அமைச்சிலும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
மனித அபிவிருத்தித் தாபனத்திடம் இது குறித்து அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். காரைதீவிலுள்ள கிழக்கு மாகாண தலைமையகத்தின் இணைப்பாளர் பி. ஸ்ரீகாந்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திருமணமாகி 03 மாதங்களில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டார் நாட்டிற்கு சென்ற இவர் சுமார் 2 வருட காலமாக அங்கு தொழில் புரிந்து வந்தார். இவர் கடந்த ஜுலை 01 ஆம் திகதி வேலை செய்து கொண்டிருக்கும்போது 09 ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளதாக கட்டாரிலுள்ள உறவினர் ஒருவர் தொலைபேசி ஊடாக மனைவிக்கு அறியப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து மனைவி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று சடலத்தை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக்கொண்டார். இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கும் சென்று தனது கணவரின் உடடை விரைவாக இலங்கைக்குக் கொண்டுவர உதவுமாறு மனைவி கோரியுள்ளார்.
இதனிடையே கணவரின் சடலத்தை அங்கேயே அடக்கம் செய்யவிருப்பதாக அங்குள்ள நண்பரொருவர் இவரிடம் தெரிவித்ததாகவும் முறையிட்டார். சடலத்தை அங்கு அடக்கம் செய்ய மாட் டார்கள். எனவே நம்பிக்கையுடன் சொல் லுங்கள். நாம் அடுத்த கட்ட நடவடி க்கைகளை எடுக்கின்றோம் என இணை ப்பாளர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply