அரசின் அழைப்பின் பேரிலேயே ரமபோ’வின் இலங்கை விஜயம்
இலங்கைக்கும் தென்னா பிரிக்காவுக்கு மிடையிலான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ இலங்கைக்கு வந்திரு ந்ததாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார். மூன்றாம் தரப்பு அனுசரணையாளராக அவர் இலங்கைக்கு வரவில்லையென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 23/2 நிலையியல் கட்டளையின் கீழ் அநுரகுமார திசாநாயக்க எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசும்போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற் கொண்டிருந்தபோது அந்நாட்டு ஜனாதி பதி ஜேகொப் சூமாவுடன் நடத்திய சந்திப்பின் அடிப்படையிலேயே ரமபோஷவின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவினதும் இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அனுபவங்களையும் இருதரப்பும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடனேயே இந்த விஜயம் இடம்பெற்றது. இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார் என்றார்.
23/2 நிலையியல் கட்டளையின் கீழ் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் இங்கு வந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. அவரை சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால.டிசில்வா விமான நிலையத்தில் வரவேற்றதன் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் ஜனாதிபதி உட்பட முக்கிய அமைச்சர்களை சந்தித்தார். வடபகுதிக்குச் சென்ற அவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார். சிறில் ரமபோஷ அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் ஆளுநரையும் சந்தித்தார். ஆனால் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி இலங்கையில் நடைபெறும் தென்னாபிரிக்க கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று சிலர் கூறியிருந்தனர்.
ஆனால் அவருடன் அரசியல்யாப்பு ரீதியான விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவுக்குழுவில் பங்கேற்க வைப்பது குறித்தும் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply