ஈராக் உள்நாட்டு போர்: 2 எண்ணெய் வயல்களை குர்தீஷ் படைகள் பிடித்தன

ஈராக் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 2 எண்ணை வயல்களை குர்தீஷ் படைகள் பிடித்துள்ளன.ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கின் பெரும் பகுதியை பிடித்து தங்கள் வசம் வைத்துள்ளனர்.இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஷியா பிரிவு ஆதரவு அரசின் பிரதமராக நூரி அல்–மலிகி பதவி வகிக்கிறார். அவர் பதவி விலக குர்தீஷ் இன தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு மலிகி மறுத்து வருகிறார்.எனவே, அவருக்கு எதிராக குர்தீஷ் இன மக்களும் இறங்கி விட்டனர். அவர்கள் ‘பெஷ்மெர்கா’ என்ற படையை அமைத்துள்ளனர். அவர்கள் கிர்குக் மற்றும் பாஸ் ஹசன் ஆகிய இடங்களில் உள்ள மிகப்பெரிய எண்ணை வயல்களை கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அவை குர்தீஷ் படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளன. அங்கிருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இவை இரண்டும் கிர்குக் அருகே உள்ளன. இதற்கிடையே குர்தீஷ் படைகளின் இந்த நடவடிக்கைக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 2 எண்ணெய் வயல்களில் இருந்த படைகளை வாபஸ் பெற்று அவற்றை அரசியிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குர்தீஷ் படைகளின் இந்த நடவடிக்கை மக்களின் நலனுக்கு ஆபத்தாக முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply