சட்டசபைக்கு தாமதமாக வந்தால் ரூ.500 அபராதம் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, அதிரடி உத்தரவு
சட்டசபை கூட்டத்துக்கு தாமதமாக வரும் பா.ஜ. – எம்.எல்.ஏ.க்கள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வாடிக்கையாக உள்ளது : ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.ஆட்சி நடக்கிறது. சட்டசபை கூட்டத்தொடருக்கு, எம்.எல்.ஏ.க்கள் தாமதமாக வருவது, இங்கு வாடிக்கையாக உள்ளது. இதில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம் தாமதமாக வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, முதல்வர் வசுந்தரா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘பா.ஜ. – எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்கு தாமதமாக வந்தால், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தார்.இந்த அறிவிப்புக்கு பின்னும், நேற்று முன்தினம் நடந்த பட்ஜெட் கூட்டத்துக்கு, பா.ஜ.வைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.க்கள் தாமதமாக வந்தனர். இதையடுத்து, அவர்களிடம், தலா, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, பா.ஜ.,வின் மூத்த எம்.எல்.ஏ. ரஜவாத் கூறுகையில், ‘முதல்வரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நம்மை தேர்வு செய்து, சட்டசபைக்கு அனுப்பி வைத்த மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கக் கூடாது. சட்டசபை நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால், எம்.எல்.ஏ.க்கள் இடையே சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக, இந்த உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார், என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply