இலங்கைக்கு விருப்பமில்லாவிட்டால் தென்னாபிரிக்கா தனது முயற்சிகளை கைவிடத்தயார் : சிறில் ரம்போசா
இலங்கைக்கு விருப்பமில்லாவிட்டால் தென்னாபிரிக்கா தனது முயற்சிகளை கைவிடத்தயார் என அந்த நாட்டின் விசேட பிரதிநிதி சிறில் ரம்போசா தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த வேளை அவருடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் உங்களது அரசாங்கத்தின் வேண்டுகோளின் பெயரிலேயே இலங்கைக்கு வந்துள்ளோம், உங்களுக்கு எங்களது பங்களிப்பு பிடிக்கவில்லை என்றால் நாங்கள் விலகிக் கொள்ள தயாராக உள்ளோம், என ரம்போசா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply