இலங்கையில் இப்போது சமாதானம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் : டோனி

இலங்கையில் சமாதானம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் டோனி, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மனித உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடலில் புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைக்கும் அவுஸ்திரேலியாவின் நடவடிக்கை இரக சியமானதல்ல என அவர் சுட்டிக்காட் டியுள்ளார். தேர்தல் காலத்தில் அளிக்கப் பட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்கையாளர்களை கடல் வழியாக திருப்தி அனுப்பி வைப்பது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply