இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்

சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த விமானத்தின் அடையாள குறியீட்டை கூற வேண்டும்.  நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஒரு பயணிகள் விமானம் மீது சந்தேகப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து அதன் அடையாள குறியீட்டை கேட்டனர். பின்னர் அதனை உறுதி செய்து கொண்டு அனுமதித்தனர்.

சிறிது நேரத்தில் மற்றொரு பயணிகள் விமானம் அதேபோல பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அதன் அடையாள குறியீட்டை கேட்டபோது, முந்தைய விமானத்தின் குறியீட்டையே கூறியதால் சந்தேகம் வலுத்தது. உடனடியாக இரண்டு மிக்௨1 ரக போர் விமானங்கள் அந்த விமானத்தை ஆராய அனுப்பப்பட்டது. அந்த போர் விமானங்கள் விரைவாக பறந்து வானில் அந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்து ஆய்வு செய்தது. அப்போது அது துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான பயணிகள் விமானம் என்றும் துருக்கியில் இருந்து டெல்லிக்கு பாகிஸ்தான் வழியாக வருவதும் தெரிந்தது. அதன்பின்னரே அந்த விமானத்தை மேற்கொண்டு பறக்க அனுமதித்தனர். ஒரே அடையாள குறியீட்டை கூறியதால் ஏற்பட்ட குளறுபடியால் நடந்த இந்த சம்பவம் இந்திய விமானப்படை வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply