அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் 3 பேர் சாவு

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பாஸடீனா நகரில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இங்கு வீட்டு உரிமையாளர் ஒருவருக்கும், குடியிருந்தவர்களுக்கும் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஒரு நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக போலீஸ் அதிகாரி ஒருவர் விரைந்து வந்தபோது, துப்பாக்கியால் சுட்ட நபர் ஓடிச் சென்று அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார். அங்கிருந்தபடி மீண்டும் சுட்டார். எனினும், அந்த நபர் அவசரத் தொலைபேசி எண்ணான 911இல் போலீஸாரைத் தொடர்பு கொண்டு, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதன்பின் மத்தியஸ்தம் செய்யும் அதிகாரியை போலீஸார் வரவழைத்து அந்த நபருடன் பேச வைத்தனர். அப்போது அந்த நபர் சரணடைய ஒப்புக் கொண்டார். இத்தகவலை பாஸடீனா காவல்துறைத் தலைவர் ஃபிலிப் சான்செஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் “துப்பாக்கியால் சுட்ட நபர் 3 ஆயுதங்களை வைத்திருந்தார். எனினும் ஒன்றை மட்டுமே பயன்படுத்தினார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இச்சம்பவத்தில் மேலும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காயமடைந்தனர்’ என்று தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply