வன்னி மக்கள் அவலம் குறித்து ஆராய்ந்து உதவி வழங்க ஏற்பாடு: றிச்சர்ட் பௌச்சர்
இலங்கைத் தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்கி அவர்களைக் கௌரவத்துடன நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளரான றிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் சிவிலியன்களை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் அந்த மக்களுக்கு அவஸ்தை கொடுக்கும் ஒரு விடயமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வன்னிப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்கப் பசுபிக் கட்டளை அணியின் உதவியுடன் வெளியேற்றுவதற்கான இருதரப்பினரினதும் அனுமதி கிடைக்கும் வரையும் அந்தச் செயற்பாட்டில் எம்மால் ஈடுபட முடியாது.
அது வரைக்கும் அங்குள்ள பொதுமக்களுக்கு எந்தெந்த உதவிகளை எங்களால் செய்ய முடியுமோ அவற்றினைச் செய்வதற்கு முயற்சிப்போம்.
வன்னியிலுள்ள மக்கள் நிலை குறித்து ஆராய்து எந்தெந்த வகையில் அப்பகுதி மக்களுக்கு உதவ முடியுமென்ற சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து அடையாளப்படுத்த எமது அதிகாரிகள் சிலரை அப்பகுதிககு அனுப்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply