இஸ்ரேலின் பாலஸ்தீன காஸா பகுதியில் மேற்கொள்ளும் விமானத் தாக்குதலை தேசிய சுதந்திர முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது
இஸ்ரேல் பாலஸ்தீன காஸா பகுதியில் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல் மிலேச்சத்தனமானதென தேசிய சுதந்திர முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதல்களால் பலஸ்தீன அப்பாவி மக்கள் 168 பேருக்கு மேற் பட்டோர் பலியானதாக ஐ. நா.பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு சர்வதேச பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. பாலஸ்தீன அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்யும்போது ஐ. நா சபையும் நவநீதம்பிள்ளையும் அமைதி காக்கின்றனர்.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் பாலஸ்தீன மக்கள் பலியாகுவது பற்றி கவலை மட்டும் தெரிவித்துள்ளன. இஸ்ரவேலர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிமை உண்டென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இஸ்ரவேலின் மனித உரிமை மீறல் தொடர்பாக
பிரேரணை நிறைவேற்றப்பட்டும் அங்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்கைப் பாவித்தது. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றம் சுமத்தப்படுவதும், சர்வதேச விசாரணை கோருவதும் புலிகளை தோற்கடித்த பழியைத் தீர்த்துக்கொள்வதற்கேயாகும்.
மேற்கத்திய சக்திகளின் இந்த இரட்டை வேட செயற்பாட்டுக்கு எதிராக கைகோர்ப்பதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply