ஐ.தே.க ஆட்சிக்கு வந்திருந்தால் வடக்கில் பயங்கரவாதம் பலமடைந்திருக்கும் : டலஸ் அழகப்பெரும

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அனைத்தையும் அகற்றிவிடுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறிவருவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.இரத்தினபுரி நகரில், இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீல. சு. கட்சியின் மாநாடு அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது,ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் வட, கிழக்குப் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப் படுமென்று அக்கட்சி கூறி வருகின்றது. தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் போலி உறுதிமொழிகளை தமிழர்களுக்கு ஐ. தே. க. வழங்கி வருகின்றது.

பல பிரதமர்களின் செயலாளராக செயற்பட்ட பிரட்மன் வீரகோன் அண்மை யில் வெளியிட்டுள்ள புத்தகமொ ன்றில் ரணில் விக்கிரமசிங்க கூறிய விடயங் களையும் குறிப்பிட்டுள்ளார். எல். ரி. ரி. ஈ. புலிப் பயங்கரவாதிகளுக்கு இடை க்கால நிர்வாக சபை வழங்கப்பட வேண்டும் அதுவரையில் நாம் வழங்கிய பதவியில் இருக்குமாறு ரணில் விக்கிர மசிங்க கோரிக்கை விடுத்த போதிலும் தான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரட்மன் வீரக்கோன் கூறி யிருந்தார்.

பிரட்மன் வீரக்கோன் ஒரு சிறந்த மனிதர். ரணில் விக்கிரமசிங்க அதற்கு எதிரானவர் என்பது உங்களுக்கு தெரியும். எனவே இதுகுறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலிகளை மீள உயிர்ப்பிக்க வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் ஐ. தே. க. உள்ளிட்ட பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 50.08 சதவீத வாக்குகளைப் பெற்றே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அப்போது முழுமையாக 51% சத வாக்குகள் பெறவில்லை. எனினும் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 51% சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றார். இதற்கு காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு ஆற்றிய சேவையாகும்.

அவர் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யாமல் இருந்திருந்தால் இன்று இலங்கையின் தற்போதைய நிலையை என்னவென்று சொல்ல முடியாது. புலிகள் பலம் பெற்றவர்களாக இருந்திருப்பர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply