அரசாங்க அதிகாரிகள் எந்த அழுத்தங்களுமின்றி சட்டங்களை உரிய முறையில் நடைமுறைபடுத்த சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது : ஜனாதிபதி
அரசாங்க அதிகாரிகள் எந்த அழுத்தங்களுமின்றி சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.போதைவஸ்து, எதனோல், வல்லப்பட்டை போன்றவற்றை கைப்பற்றும் போது சிலர் அரசாங்கத்தின் மீது விரல் நீட்டுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல்வாதிகளினதோ அல்லது வேறு எவரதும் அழுத்தங்களுக்கு அரச ஊழியர் கள் அடிபணியாத நிலைமையை உருவாக் கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.அரசதுறையை விட தனியார் துறை மீது நம்பிக்கை வைத்து அன்று செயற்பட்டவர்கள் இன்றும் தமது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தலைவலிக்கும் போது தலையணையை மாற்றுவது போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை நல்லது என்றும் பின்னர் வேறு முறைமை அவசியம் எனவும் கூறி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இன்று சகவாழ்வு பற்றி பேசுபவர்கள் அரச ஊழியர்களைக் குறைத்து தனியார் துறையை மேம்படுத்தும் கொள்கையை கைவிடாமலுள்ளமையும் வரிசையே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதி நவீன வசதிகளுடன் 10,000 மில்லியன் ரூபா செலவில் 11 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சுங்கத் திணைக்கள தலைமையகத்தை நேற்று ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
சுங்கத்திணைக்களம் 205 வருட நிறைவைக் கொண்டாடும் வேளையில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வைபவத்தில் விசேட ஞாபகார்த்த முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
நாட்டில் சட்டம் இல்லை. அதனால்தான் ஊழல் மலிந்து விட்டன. கண்ணில் மண் தூவிவிட்டு எதுவும் செய்யலாம் என்கின்றனர். இது எல்லாக் காலத்திலும் இருந்து வந்ததே. நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதால் தான் நாம் போதைப் பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கை களுக்காக பிறிதொரு பொலிஸ் பிரிவை நியமித்து நடைமுறைப்படுத்தி வரு கிறோம்.
இது அன்றிலிருந்தே இயங்கிவந்த பொலிஸ் பிரிவு நிறுவனமாகும். போதைப் பொருள் கடத்தல் போன்றவை பெருகியதாலேயே அதனை அன்று மீளமைப்பு செய்ய வேண்டி ஏற்பட்டது. அதனைத் தடுக்கும் பொறுப்பு சுங்கத்திணைக்களத்திற்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டது.
எனினும் இத்தகைய போதைவஸ்து நடவடிக்கைகளை சுற்றிவளைத்து பிடிக்கும் போதும் எம்மை நோக்கி விரல் நீட்டுகின்றனர். நாட்டிற்குள் போதை வஸ்துக்கள் வருகின்றன. நாட்டில் சட்டங்கள் நடைமுறையில் இல்லை. சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதனால், பிரச்சினைகள் எழுகின்றன என குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்கு தீர்வு அரச சேவையைப் பலப்படுத்துவதே என்பதே நம்பிக்கை. நிறைவேற்று அதிகாரம் பற்றி பேசுகின்றனர். இதனைக் கொண்டு வந்தது யார்? ஒரு காலத்தில் அது தேவையில்லை என்கின்றனர். பின்னர் கூறுகின்றனர் எமக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தேவையில்லை. வெஸ்ட் மினிஸ்டர் முறைக்குப் போகலாம் என்கின்றனர்.
எதிர்வரும் காலங்களில் இது ஒன்றும் சரிவராது வேறு ஒரு முறைக்குப் போகலாம் என்று அவர்கள் சொன்னாலும் வியப்பதற்கில்லை.
எது எவ்வாறெனினும் நாம் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துகிறோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட முடியும். அதிகாரிகளுக்கு அதற்கான சுதந்திரத்தை நாம் முழுமையாக வழங்கியுள்ளோம்.
வர்த்தகத்தில் சுட்டெண்ணில் நாம் முன்னேறி வருகிறோம். இதில் சுங்கத்திணைக்களத்தின் பங்களிப்பும் உள்ளது. நாம் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைத்தது நாம் மேற்கொண்ட சரியான தீர்வே.
எதைச் செய்தாலும் நாட்டை நேசிப்பது முக்கியம். இறுதியில் நாடுதான் முக்கியம் அதனால் நாட்டுக்கான உங்கள் சேவை மிகவும் அவசியமானது. நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்.
நாம் கீழ்மட்ட பொருளாதாரத்திலிருந்து மத்தியதர பொருளாதாரத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. பொரு ளாதாரத்தில் நாம் முன்னேற்ற மடைந்துள்ளோம். இது பெருமைக்குரிய விடயம். நாம் எப்போதும் எமது நாடு தொடர்பில் பெருமை நாம் எமது தாய்நாட்டை அன்பு செய்வோம். நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்க முடியாது. அதற்கு அனைவரதும் பங்களிப்பு அவசியம்.
குறிப்பாக அரச ஊழியர்கள் நாட்டுக்கு அன்பு செலுத்துவதோடு எந்த பாரபட்சமுமின்றி அனைத்து சமூகங் களுக்கு சேவை செய்வதை நோக்காகக் கொள்ள வேண்டும். அதே போன்று நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்த ங்களின் போதும் உங்களது மேலதிக பங்களிப்பு அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேற்படி சுங்கத் திணைக்களம் அமைந்துள்ள பிரதேசம் ஐக்கிய தேசியக்கட்சியின் காலத்தில் சிங்கப்பூர் கம்பனியொன்றுக்கு விற்பதற்கு தீர்மானித்திருந்தமையும் எனினும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் சுங்கத் தொழிற்சங்கம் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
சுங்கத்திணைக்களத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்களுக்கு சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஜகத் பி. விஜேவீர சிறப்பு நினைவுப் பரிசொன்றை வழங்கி கெளரவித்தமை விசேட அம்சமாகும். நேற்றைய இந்நிகழ்வின் போது சுங்க அருங்காட்சி யகமும் ஜனாதிபதியினால் உத்தியோகபூர் வமாக திறந்து வைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply