ரெலோ இயக்கம் ஜெர்மனியில் வெலிக்கடைப் படுகொலையின் நினைவு நாள் அனுஸ்டிப்பு (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

யூலை மாதம் வெலிக்கடை வென் சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த புலம் பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் கறுப்பு யூலை நினைவு தினத்தையொட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், நடேசுதாசன், தேவன், சிறீகுமார், சிவபாதம் உட்பட இலங்கை அரசின் சிறையில் கொல்லப்பட்ட அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.

இலங்கையிலிருந்து ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, மற்றும் பாராளுமனற உறுப்பிணர்களான வினோ, வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பிணர் கோவிந்தம் கருணாகரம் (ஜனா), வட- மாகாண சபை உறுப்பிணர் எம்.கே. சிவாஜிலிங்கம், விந்தன் உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்கள், அனைத்து நாடுகளிலுள்ள ரெலோ உறுப்பினர்கள் பொது மக்கள் இவ் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்,

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply