மோடியின் பொருளாதார கொள்கை என்னை ஈர்த்தது: பில் கிளிண்டன்

ஆசிய பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில் கிளிண்டன் நேற்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகருக்கு வந்தடைந்தார். அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இன்று பார்வையிட்ட அவர் லக்னோவுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோதே அவரை கவனித்து வந்ததாகவும், அவரது பொருளாதாரக் கொள்கைகள் தன்னை பெரிதும் ஈர்த்ததாகவும் கிளிண்டன் கூறியுள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை மறக்கவேண்டும் என்று கூறிய அவர், மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி மோடிக்கு உள்ளது என அனைவரும் கருதுவதாக தெரிவித்தார்.நவாசுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் இஸ்லாமிய சமூகத்திற்கு மோடி நல்ல செய்தியை தந்துள்ளார். அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாக தனது அரசு இருக்கவேண்டும் என்று விரும்பும் மோடியின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதில்லை என்ற அமெரிக்காவின் முடிவு முடிந்து போன ஒன்று என கிளிண்டன் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply