ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுக்கள் 30 முதல் 06 வரை ஏற்பு

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியினை தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க ஜுலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டாரென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார். இதன்படி ஆகஸ்ட் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப் படும். மேலும் கட்டுப்பணம் செலுத்தல் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 21 வேட்பாளர்களும் மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 27 வேட்பாளர்களும் கட்சிகளின் சார்பில் போட்டியிட முடியுமெனவும் அவர் விளக்கமளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply