ஊவா மாகாண சபைத் தேர்தல் உறுப்பினர் தொகையை மாற்றும் அதிகாரம் ஆணையருக்கு இல்லை
மாகாண சபைத் தேர்தலில் தெரிவாகும் உறுப்பினர் தொகையை அதிகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு கிடையாது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய சனத்தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் தான் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான உறுப்பினர் தொகையும் கணிப்பிடப்படுகிறது. யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிந்து பதுளை மற்றும் மொனராகல மாவட்டங்களுக்கான உறுப்பினர் தொகை தீர்மானிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் பதுளை மற்றும் மொனராகல மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் உறுப்பினர் தொகை மாற்றப்பட்டது குறித்து வினவப்பட்டது. இதற்கு விளக்கமளித்த ஆணையாளர், ஒவ்வொரு மாகாண சபைக்குமான உறுப்பினர் தொகை
அரசியலமைப்பின் படி ஜனாதிபதியினா லேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள 40 ஆயிரம் பேருக்கு ஒரு உறுப்பினரும் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பிற்கு ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்படவேண்டும் என மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு ள்ளது.
இதனடிப்படையில் கணிப்பிட்டால் ஊவா மாகாணத்திலிருந்து 40 உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும். ஆனால், ஊவா மாகாணத்திற்கு 32 உறுப்பினர்கள் என ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப இரு மாவட்டங்களுக்குமான உறுப்பினர் தொகை கணிப்பிடப்பட்டது. இந்த கணிப்பு தொடர்பில் ஆணையாளரின் முடிவே இறுதியானது. இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ வழக்கு தொடர முடியும்.
1988 இல் நடந்த முதலாவது ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளையில் இருந்து 19 உறுப்பினர்களும் மொனரா கலையில் இருந்து 13 உறுப்பினர்களும் தெரிவாகினர். 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பதுளையில் இருந்து 21 உறுப்பினர்களும் மொனராகலையில் இருந்து 11 உறுப்பினர்களும் தெரிவாகினர்.
ஊவா மாகாணத்திற்குரிய 32 உறுப்பினர்களும் தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பிற்கமைய கணிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபர் அடங்கலான தேவையான தரப்பினர் ஆலோசனை பெறப்பட்டது.
பதுளையில் கூடுதல் சனத்தொகையும் மொனராகலையில் கூடுதல் நிலப்பரப்பும் இருப்பதாலே இவ்வாறு மாற்றம் ஏற்பட்டது. இதனால் இரு மாகாணங்களுக் கும் ஒரே சனத்தொகை மட்டும் நிலப்பரப்பு அடிப்படையில் உறுப்பினர் தொகை கணிப்பீடு அமையாத சனத்தொகைக்கு ஏற்ப உறுப்பினர் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்பது என தனிப்பட்ட கருத்தாகும். அது குறித்து ஜனாதிபதியாலோ பாராளுமன்றத்தினாலோ தான் தீர்மானிக்க முடியும். 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் உறுப்பினர் தொகையை அதிகரிப்பது தொடர்பில் ஆணையாளருக்கு வழங்கப்பட்டி ருந்த அதிகாரம் ரத்துச் செய்யப்பட்டது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் சட்டம் ஒழுங்கை பேணி நடக்குமாறு கட்சிகளை கோருகிறேன் என்றார்.
பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமடும் இந்த ஊடக மாநாட்டில் பங்கேற்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply