ஊவா மாகாணசபை தேர்தல் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்பு

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக நேற்று  முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இதற்காக அரச நிறுவனங்கள், பொலிஸ், இராணுவ நிலைய தலைமையகங்கள் என்பவற்றில் வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்களிப்பிற்கான விண் ணப்பங்கள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை ஏற்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஊவா மாகாண சபை கலைக்கப்பட்டு வேட்பு மனுக்கள் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6 வரை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் ஆகஸ்ட் 5 வரை ஏற்கப்பட உள்ளது. செப்டம்பர் பிற்பகுதில் இங்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply